விமான விபத்தின் போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது அன்மைகாலமாக சகஜமாகி வருகிறது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.