ஒரு குழந்தைக் கொள்கையைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு சீனா அறிவித்துள்ள நிலையிலும், முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு 3.2 லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: குடும்பக் கட்டுப்பாட்டு விதிகள் கடந்த 2013-ஆம் ஆண்டே தளர்த்தப்பட்டன.
மேலும் ஒருகுழந்தைக் கொள்கையைக் கைவிடுவதாகவும் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
எனினும், 2014-ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு 3.2 லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளன.
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
2