ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பது குறித்து அடுத்த ஆண்டு இறுதியில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வாடிகன் வெளியுறவு மந்திரி ஆர்ச் பிஷப் பால் கல்லாகெர் அளித்த பேட்டியில், “ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால், அது அந்த அமைப்பை பலவீனப்படுத்தி விடும்” என கூறினார்.
மேலும், “இங்கிலாந்து மக்களின் முடிவை மதிக்கிறோம். எனவே இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.