இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வது தொடர்ந்தால், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மலேசியா மற்றும் இந்தோனேசியப் பகுதிக்கான ஐ.எஸ். பிரிவான கடீபா நுஸாந்தாரா, இணையதளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
மலேசியா, இந்தோனேசிய நாடுகளில் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்தால், அந்த நாடுகளின் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.
மாறாக, எங்கள் பணிகளைச் செய்ய எங்களை விட்டுவிட்டால், அந்த இரு நாடுகளிலும் மதப்பேரரசை மீண்டும் கொண்டு வருவோம்.
இறைவனின் ஆட்சிக்கு மட்டுமே தலை வணங்கும் நாங்கள், ஜனநாயக ஆட்சி முறைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவில் பூர்விக மலேயர்கள், இந்தியர்கள், சீனர்கள் ஆகிய பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.