வரும் ஜூன் மாதம் முதல், தங்கள் நாட்டுக்கு வரும், அனைத்து வெளிநாட்டினரின் கைரேகைகளை பதிவு செய்ய, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் டெஸ்மாண்ட் லீ கூறியதாவது:
விமானம், பேருந்து மற்றும் கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு வரும், அனைத்து பயணிகளின் கை ரேகைகளும், வரும் ஜூன் முதல், கட்டாயமாக பதிவு செய்யப்படும். கைரேகை பதிவு முடிந்தபின்பே, சிங்கப்பூருக்குள் செல்ல, வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவர். சிங்கப்பூரிலிருந்து கிளம்பும்போது, அவர்களின் கைரேகை பதிவு சரி பார்க்கப்படும். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையிலும், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும், இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.