செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலிஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலி

ஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலிஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலி

1 minutes read

ஏமனில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

ஏமனில் அதிபர் அப்ட்ரா டிக் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தி தலைநகர் சனாவை கைப்பற்றினர். எனவே, கடந்த ஜூலை முதல் ஹாதி துறைமுக நகரமான எடனை தனது தலைநகராக மாற்றினார்.

அங்கு தனது அமைச்சரவை, ராணுவத்துடன் அரசு நடத்தி வருகிறார். இவருக்கு பின்னணியில் சவுதி அரேபியா ஆதரவு அளித்துள்ளது. அதே நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பக்கபலமாக உள்ளது.

அரசின் ஸ்திரமற்ற நிலையை பயன்படுத்தி ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளும், அல்கொய்தா தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று அதிபர் ஹாதியின் ஏடன் மாளிகை அருகே கார் குண்டு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிபர் மாளிகைக்கு முன்பு சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் சோதனை சாவடி உள்ளது. அங்கு காரில் வேகமாக வந்த தீவிரவாதி அதன் மீது மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இத்தாக்குதலில் 11 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் 2 குழந்தைகள், பொது மக்கள் அடங்குவர், மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கார் குண்டு தற்கொலை தாக்குதல் நடந்த போது அதிபர் மன்சூர் ஹாதி மாளிகையில் தான் இருந்தார். ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.