ஹைட்ரஜன் குண்டு வெடித்து பரிசோதித்ததின் மூலம் சமீபத்தில் உலக நாடுகளின் கண்டனத்துக்குள்ளான வட கொரியா மீண்டும் அணு ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக கிடைத்துள்ள தகவலையடுத்து ராணுவத்தை உஷார்நிலையில் இருக்குமாறு ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னர் நான்குமுறை அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தியுள்ள வட கொரியா இம்முறை ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்தி பரிசோதிக்கவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, வட கொரியாவின் எவ்வித அத்துமீறலையும் எதிர்த்துத் தாக்கி, முறியடிக்கும் வகையில் தயார்நிலையில் இருக்குமாறு அந்நாட்டு கடற்படையினருக்கு ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி ஜென் நகாட்டானி உத்தரவிட்டுள்ளார்.