செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் தாய்லாந்தில் யானை நசுக்கி மரணம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் தாய்லாந்தில் யானை நசுக்கி மரணம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் தாய்லாந்தில் யானை நசுக்கி மரணம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் தாய்லாந்தில் யானை நசுக்கி மரணம்

1 minutes read

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கேரத் குரோவ் (வயது 36). இவர் தனது மகளுடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் நேற்று முன்தினம் அங்குள்ள சுற்றுலாத்தலம் ஒன்றில் மகளுடன் யானை மீது அமர்ந்து சவாரி சென்றார். அவர்களுடன் யானைப்பாகனும் உடன் இருந்தார்.

ஆனால் அந்த யானை திடீரென ஆவேசம் அடைந்து, அவர்கள் மூவரையும் தூக்கி வீசியது. குரோவை காலால் நசுக்கி கொன்றது. அவரது மகளும் யானைப்பாகனும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் நடந்த சாமுய் மாவட்ட தலைவர் பாய்பூன் ஒமார்க் இது பற்றி கூறுகையில், “கடுமையான வெயில் காரணமாக யானை கோபம் அடைந்துதான் இப்படி நடந்து கொண்டது என சந்தேகிக்கிறோம். குரோவை பொறுத்தமட்டில், அவர் செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தவர் என்பதால் யானையின் ஆவேசத்தில் இருந்து விடுபட்டு அவரால் ஓட முடியாமல் போய் விட்டது. இதில் அவரது மகளும், மியான்மரை சேர்ந்த யானைப்பாகனும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின்னர் இப்போது அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டனர்” என்றார்.

கோல்ப் என்று அழைக்கப்படுகிற அந்த யானை இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.