செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 minutes read

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் குபாங் நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது குபாங் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் பீதியடைந்தனர். பின்னர் அவர்கள் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.