உலக சமஸ்கிருத விருதுக்கு, தாய்லாந்து இளவரசி சக்ரி சிரிந்தோர்ன், 60, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், கடந்த ஆண்டு, 16வது சர்வதேச சமஸ்கிருத மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக, சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு, உலக சமஸ்கிருத விருது வழங்கப்படும்’ என, அறிவித்தார்.
இந்த மாநாடு, தாய்லாந்து இளவரசியும், சமஸ்கிருத அறிஞருமான சக்ரி சிரிந்தோர்ன் ஆதரவில் நடந்தது. இந்நிலையில், முதலாவது உலக சமஸ்கிருத விருதுக்கு, தாய்லாந்து இளவரசி சிரிந்தோர்ன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து சென்றிருந்த, இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி, அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள அரண்மனைக்கு சென்று, இளவரசி சிரிந்தோர்னை சந்தித்தார். அப்போது, உலக சமஸ்கிருத விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தெரிவித்து, விருதை பெற, இந்தியா வரும் படி அழைப்பு விடுத்தார்; இதை, இளவரசி ஏற்றுக்கொண்டார்.
உலக சமஸ்கிருத விருது, பட்டயம் மற்றும், 13.5 லட்ச ரூபாய் பரிசு தொகை கொண்டது.