செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்ததுநேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்தது

நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்ததுநேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்தது

0 minutes read

கடந்த 5 மாதங்களாக நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.

அந்த நாட்டில் புதிய அரசியல் சாசனத்தில் திட்டமிட்டுள்ளபடி, புதிய மாகாணங்கள் அமையும்பட்சத்தில், அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்று கூறி மதேசி பிரிவினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

நேபாளம் – இந்தியா இடையேயான முக்கியச் சாலையையும் அவர்கள் கடந்த 5 மாதங்களாக முடக்கி வந்தனர். இதனால் இந்தியாவிலிருந்து மருந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் நேபாளத்துக்குள் நுழைய முடியாமல், அங்கு அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேபாளத்துக்குப் பொருளாதார நெருக்கடி அளிக்கும் விதமாக, மதேசிகளின்

மறியலுக்குப் பின்னால் இந்தியா செயல்படுகிறது என்று நேபாளத்தில் சில கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியை மனதில் கொண்டு தங்களின் எல்லைப்புறச் சாலை மறியலைத் திரும்பப் பெறுவதாக மதேசி ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் அறிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.