செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்

1 minutes read

இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம் என பாக்., வக்கீல் ஒருவர் அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை பாக்., ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

 

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா போராடி வருகிறது. இதனை இங்கிலாந்து ஏற்க மறுத்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தானும் கோஹினூர் வைரத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது.

 

பாக்., ஐகோர்ட்டில் அந்நாட்டு வக்கீல் ஜாவித் இக்பால் ஜாப்ரி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் மகாராஜா ரஞ்சித் சிங் பேரனிடமிருந்து, இங்கிலாந்து கோஹினூர் வைரத்தை எடுத்து சென்றதாகவும், விடுதலைக்கு பின் ரஞ்சித்சிங் ஆட்சி செய்த பகுதி பாக்., எல்லைக்குள் வந்துவிட்டதால் வைரம் பாக்., நாட்டிற்கே சொந்தம் எனவும், வைரத்தை ஒப்படைக்க இங்கிலாந்தை நிர்பந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பாக்., ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

 

கோஹினுார் வைரம் தற்போது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தைஅலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.