ஆப்பிரிக்க நாடான கானாவில் பகுதியில் பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 61 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கானா தலைநகர் அக்ராவிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கின்டாம்பூ நகரில் புதன்கிழமை நள்ளிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 61 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கானா அதிபர் ஜான் டிரமணி மஹாமா, சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.