செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா 43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா

43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா 43 ஆண்டுகள் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் விடுதலை | அமெரிக்கா

1 minutes read

அமெரிக்காவில் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரெண்ட் மில்லர் என்ற சிறை காவலர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், ‘அங்கோலா த்ரி’ என்ற குழுவை சேர்ந்த ஆல்பர்ட் உட்பாக்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் லூசியானா மாகாணத்தில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் நான் நிரபராதி என்று ஆல்பர்ட் உட்பாக்ஸ் கூறி வந்தார். சட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்தார்.

முடிவில் அவருடன் அரசாங்க வக்கீல்கள் சமரச பேச்சு நடத்தினர். அதில் அவர் கொலை குற்றச்சாட்டுக்கு பதிலாக குறைந்த அளவிலான குற்றச்சாட்டு பதிவு செய்தால், ஒப்புக்கொள்கிறேன் என கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் இந்த வழக்கில் ஒன்றும் அறியாதவன். ஆனாலும் எனது வயது, உடல்நலக்குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் ஒரு தீர்வு காண விரும்பினேன்.

அதன் காரணமாக குறைவான குற்றச்சாட்டை ஏற்க முன்வந்தேன்” என்றார்.

இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 43 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவருக்கு வயது 69. அமெரிக்க வரலாற்றில் அதிக காலம் தனிமைச்சிறையில் இருந்தவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

சிறையில் இருந்து வெளியானதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “நான் சிறையில் இருந்தபோது என் தாயார் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போது என் தாயாரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவேன்” என கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.