செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசைபூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசை

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசைபூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது அபூர்வ இசை

1 minutes read

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.

இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால், இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, 1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.

அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.