வட கொரியாவுக்கு அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை வழங்கப்போவதில்லை என்ற ஐ.நா. வரைவுத் தீர்மானத்துக்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது :
ஐ.நா. தடையை மீறி ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை, ராக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட வட கொரியாவுக்கு, ஒருங்கிணைந்த பதிலடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயும் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின்போது ஏற்றுக் கொண்டனர்.
வட கொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அந்த நாட்டுக்கு அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை வழங்க மறுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்துக்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.