செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐரோப்பாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் | “யூனியனில் தொடரலாமா அல்லது விலகிவிடலாமா”ஐரோப்பாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் | “யூனியனில் தொடரலாமா அல்லது விலகிவிடலாமா”

ஐரோப்பாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் | “யூனியனில் தொடரலாமா அல்லது விலகிவிடலாமா”ஐரோப்பாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் | “யூனியனில் தொடரலாமா அல்லது விலகிவிடலாமா”

1 minutes read

ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேறுமாபிரிட்டன்?

“என்றென்றும் இணைந்திருப்போம்’ என்ற கோஷத்துடன் 1993-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன்.

இரண்டாம் உலகப் போரின்போது எலியும், பூனையுமாக இருந்த ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்து, அசுர பலம் வாய்ந்த ஒரே தேசமாக உருமாற்றும் கனவுடன் ஆரம்பிக்கப்பட்டது அந்த அமைப்பு.

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதன் அடிப்படையில் உருவான அந்த அமைப்பின் நிலை, இன்று சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

ஒரே நாணயம், மாநில எல்லைகளைப் போன்ற தேச எல்லைகள் என்று உலகின் மற்ற பிராந்தியங்களைப் பொறாமை கொள்ளச் செய்யும் வகையில் ஒற்றுமை காத்த ஐரோப்பிய யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக சச்சரவுகள் அதிகரித்து வருகின்றன.

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பின் எதிர்காலமே தற்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

இதன் அடையாளமாக, ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா, அல்லது அதிலிருந்து விலகிவிடலாமா என்று ஐரோப்பாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கு, வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் பொதுவாக்கெடுப்பில் பதில் சொல்லப் போகிறார்கள் பிரிட்டன் மக்கள்.

ஐரோப்பாவை மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளும் இதற்கான பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கின்றன.

ஐரோப்பிய யூனியன் ஆரம்பித்தது முதல் அதனை எதிர்த்து வரும் பிரிட்டன் தேசியவாதிகள், விலகுவதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டனையே, பொதுவாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய யூனியனின் “அடிமைத் தளை’யிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.