இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் முடிந்து 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கண்ணி வெடிகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. கண்ணிவெடிக்கு எதிராக ஒட்டவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இடம் பெயர்ந்த குடிமக்களை மறு குடியமர்த்தலின் முக்கிய நடவடிக்கையாக இது எடுக்கப்படுகிறது எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
0