இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 2–வது மகன் யோஷிதா ராஜபக்சே. இவர் இலங்கை கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது யோஷிதா பண மோசடி செய்து ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இவர் தவிர ஜயந்தா வீரசிங்கே உள்பட 3 பேரும் கைதாகினர். இச்சம்பவம் கடந்த ஜனவரி 30–ந் தேதி நடந்தது. இதை தொடர்ந்து கடற்படை பணியில் இருந்து யோஷிதா ராஜபக்சே சஸ்பெண்டு (தற்காலிக பணி நீக்கம்) செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவரது காவலை வருகிற 24–ந் தேதி தேதிவரை நீடித்து குடுவேலா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து அவர் கொழும்பு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு யோஷிதா ராஜபக்சே மற்றும் 3 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.