செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 50 அமெரிக்க நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும்50 அமெரிக்க நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும்

50 அமெரிக்க நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும்50 அமெரிக்க நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும்

1 minutes read

கோடை கால உச்சத்தில், ஸிகா வைரஸ் அமெரிக்காவின் 50 நகரங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது புதிதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கோடை காலத்தில் ஸிகா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம் (என்சிஏஆர்) ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸிகா வைரûஸ “ஏடிஸ் எகிப்தி’ வகை கொசுக்கள் பரப்புகின்றன. இவ்வகை கொசுக்களின் உற்பத்திக்கு ஏற்ற சாதகமான தட்பவெப்பம் கோடைகாலம் ஆகும். எனவே, கோடைகால உச்சத்தில் இக்கொசுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதையடுத்து, அமெரிக்காவின் 50 நகரங்களை ஸிகா வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, நியூயார்க், ஃபீனிக்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களில் இவ்வகை கொசுக்கள் உற்பத்திக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

அதே சமயம், இளவேனிற்காலத்தையொட்டி தென்கிழக்குப் பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் உற்பத்தி மிதமான அளவில் இருப்பதால் ஸிகா வைரஸ் தாக்கம் குறைவான அளவிலேயே இருக்கும்.

குளிர்காலத்தையொட்டி, தெற்கு ஃப்ளோரிடா மற்றும் தெற்கு டெக்ஸாஸ் பகுதிகளில் ஸிகா வைரஸ் பாதிப்பு இருக்காது என ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸிகா வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நகரங்களை முன்கூட்டியே கண்டறிந்துள்ளதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும் என்று என்சிஏஆர் அமைப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூ மோனகன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.