செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்

நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்

0 minutes read

அமெரிக்காவுடன் வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை முக்கிய உறுப்பினர்களாகக் கொண்ட நேட்டோ அமைப்பு உலகின் சக்தி வாய்ந்த ராணுவக் கூட்டமைப்பாகும். இந்த நாடுகள் தங்களுக்குள் ராணுவம், வர்த்தகம், தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவுடனும் வர்த்தகம், தொழில்நுட்பத் துறையில் நேட்டோ நாடுகளுக்கு இணையான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஹோல்டிங் இந்தத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை தடையின்றி இறக்குமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்கும்.

மேலும், வர்த்தகம், தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றத்தில் நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா எந்த அளவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளிக்கிறதோ, அதே அளவு ஒத்துழைப்பு இந்தியாவுக்கும் கிடைக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.