மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் ஹெலெய்ங் உறுதியளித்துள்ளார்.
மியான்மர் ராணுவத்தின் வலிமையைப் பறைசாற்றும் வருடாந்திர ராணுவ தின அணிவகுப்பு, தலைநகர் நேபிடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு ராணுவத் தலைமைத் தளபதி ஆங் ஹெய்லாங் பேசியதாவது:
இந்த நாடும், நாட்டு மக்களும் வளம்பெறுவதற்கு மியான்மர் ராணுவம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். சட்டம்-ஒழுங்கை மதிக்கத் தவறுவது, ஆயுதப்படைகளின் ஊடுருவல் முயற்சி ஆகிய இரண்டு காரணங்களும் நாட்டை ஜனநாயகப் பாதைக்கு கொண்டுவருவதற்கு தடைக்கற்களாக உள்ளன. அவற்றைச் சரியாகக் கையாண்டால், ஜனநாயகப் பாதையில் மியான்மர் சீரிய முறையில் முன்னேறும் என்றார் அவர்.