செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷியத் தாக்குதல் உதவியுடன் பால்மைரா மீட்பு | சிரியாரஷியத் தாக்குதல் உதவியுடன் பால்மைரா மீட்பு | சிரியா

ரஷியத் தாக்குதல் உதவியுடன் பால்மைரா மீட்பு | சிரியாரஷியத் தாக்குதல் உதவியுடன் பால்மைரா மீட்பு | சிரியா

1 minutes read

சிரியாவில் உள்ள புராதன நகரான பால்மைரா இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

பயங்கரவாதிகளிடமிருந்து அந்நகரை மீட்க கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் ரஷியா கணிசமான பங்களிப்பைச் செய்தது என்று சிரியா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது.

பால்மைராவை மீட்கும் இறுதிச் சண்டையில் சுமார் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இறுதி மீட்பு நடவடிக்கையில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் குறைந்தபட்சம் 56 வீரர்கள் பலியானதாக சிரியா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த பால்மைரா நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் அந்த நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இஸ்லாமுக்கு விரோதமானவை என்று கூறி, வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். பால்மைராவை மீட்பது சிரியா ராணுவத்தின் முக்கிய லட்சியமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் பால்மைராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னேறிய ராணுவம், கடும் சண்டைக்குப் பிறகு தற்போது அந்த நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.