செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்

எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்

1 minutes read

எகிப்து நாட்டில் 63 பேருடன் நடுவானில் கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் தீவில் தரையிறக்கப்பட்டது.

அதிலிருந்த பயணிகளும், பணியாளர்களும் விமானத்திலிருந்து வெளியேறியதையடுத்து, அதனைக் கடத்திய நபர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.

இதையடுத்து அந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

எகிப்தின் கடலோர நகரான அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து, தலைநகர் கெய்ரோவை நோக்கி எகிப்து}ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 56 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த சயீஃப் அல்தீன் முஸ்தஃபா என்பவர், தனது உடலில் வெடிகுண்டைப் பொருத்தியிருப்பதாகக் கூறி, அந்த விமானத்தை துருக்கி அல்லது சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு செல்லுமாறு மிரட்டினார்.

அதையடுத்து சைப்ரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

அங்கு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 3 வெளிநாட்டுப் பயணிகள், 4 விமானப் பணியாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விடுவித்தார்.

தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தனக்கு சைப்ரஸில் அடைக்கலம் வேண்டும் எனவும், தனது முன்னாள் காதலியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பல மணி நேரம் நீடித்த பரபரப்புக்குப் பிறகு அந்த விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகளும், பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும், அவர்களில் ஒருவர் விமானிகள் அறையின் சாளரம் வழியாகக் குதித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விமானத்திலிருந்து வெளியேறி, பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.

இதுகுறித்து எகிப்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷெரீஃப் ஃபாதி கூறியதாவது:

எகிப்து}ஏர் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது.

விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும், பணியாளர்களும் நலமுடன் உள்ளனர் என்றார் அவர்.

கடத்தலில் ஈடுபட்ட சயீஃப் அல்தீன் முஸ்தஃபா எகிப்து நாட்டவர் எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விமானத்தைக் கடத்தியதாகவும் எகிப்து பிரதமர் ஷெரீஃப் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடத்தப்பட்டபோது அந்த விமானத்தில் 8 அமெரிக்கர்கள், 4 நெதர்லாந்து நாட்டவர், 4 பிரிட்டன் நாட்டவர், ஒரு பிரான்ஸ் நாட்டவர் இருந்ததாக எகிப்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பயங்கரவாதம் காரணமல்ல: இந்த விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை என்று கூறிய எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சகம், மனநிலைத் தடுமாற்றம் காரணமாக இந்தக் கடத்தல் நிகழ்த்தப்பட்டதாக விளக்கமளித்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.