செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தைஉலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை

உலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தைஉலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை

0 minutes read

அமெரிக்காவில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டின் இடையே, அந்த மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுடன் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் திங்கள்கிழமை கூறியதாவது:

அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமானோர் அமெரிக்கா வருகை தரவுள்ளனர்.

அவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்தும், அவர்களை அடியோடு ஒழிப்பதற்காக கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார் என்றார் அவர்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31, ஏப்ரல் 1) நடைபெறவிருக்கும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 40 நாடுகள் பங்கேற்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.