செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20% பிடித்தம்

மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20% பிடித்தம்

0 minutes read

மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேளையில் உள்ள நிறுவனத்திலிருந்து பாதியிலேயே வெளியேறுவதை தடுக்க சம்பளத்தில் 20% பிடித்தம் செய்யும் திட்டத்தை மலேசிய மனிதவள அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் 20% தொகை சமூக பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன். ரப்பர் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட இருதரப்பினரும் பயனடைவர். வேலைக்காலம் முடிந்து தொழிலாளர்கள் வெளியேறும் போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை தொழிலாளர்களிடமே ஒப்படைக்கப்படும்” எனக் கூறியிருக்கிறார்.

மலேசிய தேசிய தொழிலாளர் ஆலோசனை கவுன்சிலிடம் இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனைகளுக்கு பின்னர் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான திட்டம் புதிதான ஒன்றல்ல, ஏற்கனவே ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடைமுறையில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.