Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 5 சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்

5 சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்

1 minutes read

9திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்களான சாய்ஸ்ரீ கார்த்திக் மற்றும் ஸ்ரீ சந்தானபாலன் ஆகியோரே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர்கள், 3 ஆசிய சாதனை புத்தகத்திலும், 1 இந்திய சாதனை புத்தகத்திலும், 1 தமிழ்நாடு சாதனையாளர் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 21 அன்று ஆசிய புக்கொப் ரெக்கார்டு யோகாவிலும் மற்றும் டிசம்பர் 31 அன்று யோகாவிற்காக ஆசிய சாதனையாளர் புத்தகத்திலும், ஏப்ரல் 22 அன்று வில்வித்தைக்காக ஆசிய சாதனையாளர் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி, கடந்த செப்டம்பர் 2 அன்று வில்வித்தைக்காக இந்திய புத்தகத்தில் இடம்பெற்றதோடு, ஜனவரி 20, 2019 அன்று, தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களின் இந்த சாதனையை பாராட்டும் முகமாக, பாண்டிச்சேரி ஆளுநர் அவர்கள் இருவரையும் பாராட்டி, நினைவுப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More