1
சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவான் நாட்டில் ஏற்பட்டது. நேற்று மதியம் வழக்கம்போல் மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானது.
நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் வரை நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
