ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி என்ற இடத்தில் கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரதமர் மாரிகன் தலை மீது முட்டையை எறிந்தார். ஆனால் அந்த முட்டை அவரது தலையில் உடையவில்லை. தரையில் விழுந்து உடைந்தது. உடனே அங்கு இருந்த போலீசார் அப்பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
