October 4, 2023 5:36 pm

மீண்டும் கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ள இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது அரச கடமைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில், தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அவர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பொரிஸ் ஜோன்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குநர் லீ கெயின் ஆகியோரும் நேரில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தார். இதனைத் தொடர்ந்து தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய அவர், வீட்டில் இருந்தவாறே அலுவலகக் கடமையை நிறைவேற்றி வந்தார்.

எனினும் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமானதைத் தொடர்ந்து பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் சிகிச்சை பெற்றுவந்த பின்னர் தற்போது குணமடைந்து தனது இல்லத்துக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர் தனது கடமைகளைச் செய்வதற்கு ஆரம்பித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்