Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்

பிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்

4 minutes read
ஜோசப் பரராஜசிங்கம் Archives - Sri Lanka Tamil News - Newsfirst | News1st |  newsfirst.lk | Breaking

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுச் செய்துள்ளது.

இவ்வாறு முகநூலில் எழுதப்பட்ட பதிவு ஒன்று வாசகர்களுக்காக…

பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயா ராஜபக்சே போட தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை ஒருங்கிணைத்து புலனாய்வு துறை அதிகாரிகளை முன்னிலைப்படுத்தி ஒரு இரகசிய புலனாய்வு குழுவை 2005-2009 காலப்பகுதியில் இயக்கினார்

இந்த குழுவின் ஏற்பாட்டில் தமிழ் ஆயுத குழுக்களின் பங்குபற்றலுடன் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கடத்தி காணாமலாக்கப்பட்டனர் . படுகொலை செய்யப்பட்டனர் . கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் அனுசரணையில் பணத்திற்காக அப்பாவிகளை கடத்தி கொன்று போடவும் தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் 24-12-2005 அன்று நள்ளிரவில் மட்டக்களப்பு கிறித்துவ தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வந்து இருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை கொன்று போட பிள்ளையான் குழுவை கோத்தபாயா ராஜபக்சே பயன்படுத்தினார்

இந்த கொலைக்காக ஒரு வானில் அதன் சாரதி, மேலும் இருவர் உட்பட சித்தா மாஸ்டர் என அழைக்கப்பட்ட ஒரு பிள்ளையான் குழு உறுப்பினரை கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் இரகசிய புலனாய்வு குழு ஏற்பாடு செய்து இருந்தது . இந்த குழுவில் சிங்கள இராணுவ புலனாய்வு உறுப்பினர் ஒருவரும் உள்ளடக்க பட்டு இருந்தார் . கோத்தபாயா ராஜபக்சேவின் புலனாய்வு குழுவின் ஏற்பாட்டில் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.க்கு அருகாமையில் சென்று அவரைச் சுட்டுக்கொன்ற பொறுப்பு சித்தா மாஸ்ரர் என்கிற பிள்ளையான் குழு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது . சித்தா மாஸ்ரர் எனப்படும் பிள்ளையான் உறுப்பினருக்கு துணையாக மேற்சொன்ன சிங்கள இராணுவ புலனாய்வு உறுப்பினர் அனுப்பப்பட்டார் .

சிலவேளை சித்தா மாஸ்ரரின் துப்பாக்கிச் சூட்டில் பரராஜசிங்கம் எம்.பி. சில வேளை தப்பினால், குறிப்பிட்ட சிங்கள நபர் மூலம் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டு கொள்ளும் ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதே போல தேவாலயத்தின் எதிர்ப்புறத்திலிருந்த கட்டடம் ஒன்றின் மீதும் பிள்ளையானின் மூன்று நபர்களை ஏ.கே. ரக துப்பாக்கியுடன் நிறுத்த பட்டு இருந்தார்கள் . சித்தா மாஸ்ரர் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்களைச் சுடுவதற்காக இந்த நபர்களை இராணுவ புலானய்வு பிரிவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் சிங்கள இராணுவ புலனாய்வு நபர் பாதுகாப்பில் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி க்கு நெருக்கமாக சென்ற சித்தா மாஸ்ரர் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டு கொன்றார் . சித்தா மாஸ்ரர், ஜோசப் பரராஜசிங்ம் எம்.பி.யைச் சுட்டுக் கொன்றுவிட்டு எந்த வித பாதுகாப்பு கெடுபிடியுமின்றி வாகனத்தில் ஏறி நேராக சிங்கபுர இராணுவ முகாமுக்கு சென்றார். அங்கு அப்போது தங்கவைக்கப்ட்டு இருந்த பிள்ளையான் மூலமாக இந்த செய்தி உடனடியாக கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு சொல்லப்பட்டது

இந்த கொலை மட்டுமின்றி 2004-2010 காலப்பகுதியில் கிழக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கொலைகள் , கடத்தல்களுடன் பிள்ளையான் கும்பல் தொடர்புபட்டு இருந்தது . குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் , ஜோஸ்ப் பரராஜசிங்கம் , துணைவேந்தர் ரவீந்தரநாத் , பத்திரிகையாளர் நடேசன் , திருகோணமலை விக்னேஸ்வரன் போன்ற பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் /சமூக பிரமுகர் படுகொலைகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்புபட்டு இருந்தார். பிள்ளையான் கும்பல் சம்பத்தப்பட்ட சகல கொடூரங்களும் இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஐர் ஜெனரல் கபில கெந்த விதாரண அவர்களின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றன

அதே போல கிழக்கில் விபச்சாரத்திற்கு பெண்களை கடத்தும் வேலைகளை கூட பிள்ளையான் , கருணா , இனியபாரதி போன்றவர்கள் செய்தனர். குறிப்பாக பிள்ளையான் குழுவை சேர்ந்த மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதலவர் சிவகீர்த்தா பிரபாகரன் அவர்கள் மட்டக்களப்பில் விபச்சார விடுதிகள் நடத்தி வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். இதே போல பிள்ளையான் குழுவை சேர்ந்த இனியபாரதி என்பவன் அம்பாறையில் விபச்சாரம் , போதைவஸ்து கடத்தல் , ஆட் கடத்தல் என கொடூரங்களை நடத்தி வந்த நிலையில் இப்போது ஆட்கடத்தல் வழக்கு ஒன்றில் சிறை வைக்கப்பட்டு இருந்தான்

இதுமட்டுமில்லாது பிள்ளையான் குழு பல பகுதிகளில் பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலை கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து ஒன்று பல இராணுவ அதிகாரிகளின் பேசு பொருளாக 2006-2010 காலப்பகுதியில் இருந்தது.

இது தவிர அப்பாவி குழந்தைகளையும் காசுக்காக கடத்தி படுகொலை செய்யும் வேலைகளையும் பிள்ளையான் கும்பல் செய்து வந்தது . அந்த வகையில் திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி என்ற சிறுமியை கப்பம் பெறும் நோக்கில் கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவியையும் கப்பம் பெறுவதற்காக கடத்தி சென்று படுகொலை செய்தனர்.

அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

இவ்வாறு சொந்த தேவைகளுக்காகவும் பணத்திற்காகவும் கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் கூலிப்படையாக ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடிய இந்த கும்பல்கள் ராஜபக்சே நீதி நிருவாகத்தில் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் . மிருசுவிலில் அப்பாவி குழந்தையின் கழுத்தை திருடி கொன்ற இராணுவ உறுப்பினரை விடுதலை செய்யும் நாடு ஒன்றில் இது ஆச்சரியமானது அல்ல .

ஆனால் என்றோ ஒரு நாள் தங்களது தேவைகளுக்காக ராஜபக்சே குடும்பம் இந்த கொலைகார கும்பல்களை பலி கொடுக்கும் காலம் வரும்..

நன்றி -இனத்தின் குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More