Saturday, January 16, 2021

இதையும் படிங்க

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

இந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தை...

வடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி!

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்!

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சேர்ந்த...

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைக்கிறார். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை...

இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்!

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவை நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ...

ஆசிரியர்

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா

யாழில் மீள்ளெளுச்சியாக்கப்பட வேன்டிய கிட்டுப்பூங்கா!சபையில்  பிரேரணை-வி.மணிவண்ணண்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள்.

இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர்ப்படும் கந்தர்மடச் சந்தியின் முடக்கில் பண்டிதர் சரணாலயம் அமைந்திருந்தது.

கப்டன் பண்டிதர் என்ற இயக்கப் பெயர் கொண்ட ப.ரவீந்திரன் வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.

நல்லுார் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..! | Thinappuyalnews

அச்சுவேலியிலுள்ள விடுதலைப்புலிகளின் கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில், பயங்கரச் சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் தியாகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரமரணம் அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர். (கப்டன் பண்டிதர் குறித்த தகவல் உதவி : ஈழமலர் இணையம்)

இவ்விதம் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதர் அவர்கள் ஞாபகார்த்த்தமாகவே அப்போது பண்டிதர் சரணாலயத்தை விடுதலைப் புலிகள் உருவாக்கினர்.

சாரல்: கிட்டு மாமா பூங்கா

நல்லூர்த் திருவிழாவுக்கு இணுவிலில் இருந்து போகும் சாக்கில் தான் பண்டிதர் சரணாலத்துக்கும் முற்றுகை இடுவோம். அம்மாவுடன் போனால் கைலாசப் பிளையாரடியால் பஸ்ஸில் தான் பயணிக்க வேண்டும். இதைத் தவிர்த்து அப்பாவின் சைக்கிளில் குந்தியிருந்து போனால், கோயிலில் சுவாமி தரிசனம், நல்லூர்த் தேர்முட்டி அடியில் இருந்து யோகர் சுவாமிகள் குறித்து அப்பாவின் சிந்தனைகளைப் பொறுமையாகக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து, வழி தெருவில் கச்சான் கடலைக்கும் அடம் பிடிக்காமல் பண்டிதர் சரணாலயத்துக்கு முன் வரை அமைதிய வந்து பேச்சைக் கிளப்பி விடுவேன்.

“அப்பா அப்பா உள்ளுக்கை ஒருக்கால் எட்டிப் பார்த்து விட்டு வரட்டோ?”

சரி இவன் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறானே என்று அப்பாவும் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு வெளியே கூட்டத்தோடு நிற்பார். சில சமயங்களில் தானும் கூட வருவார். சிறுவருக்கு ஐம்பது சதம், பெரியவர்களுக்கு ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று நினைவு.

உள்ளே கிளிகள், குருவிகள் என்று ஏகப்பட்ட பறவை இனங்கள், ஆட்டம் போடும் குரங்குகளில் இருந்து வன்னிக் காடுகளில் பிடித்த அரிய வகை உயிரினங்கள் எல்லாம் கூண்டுக்குள் நின்று வேடிக்கை காட்டும். ஒவ்வொரு கூண்டிலும் அழகு தமிழில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். என் ஞாபக அறிவில் வித விதமான தாவரங்களும் அவற்றின் விஞ்ஞானப் பெயர்களோடும், தேனீ வளர்ப்பு முறைமையும் இருந்ததாகவும் நினைப்பு.

அந்தக் காலத்தில் வீடுகளில் லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் மோகம் முளை விட்டிருந்த காலத்தில் இப்படி பண்டிதர் சரணாலத்த்தில் வித விதமான வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதே அப்போது எங்களுக்கு ஆச்சரியமான அனுபவம்.

கிட்டு - தமிழ் விக்கிப்பீடியா

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையாக வந்து இலங்கை அரசிடம் சோரம் போனதோடு எழுந்த போரோடு பண்டிதர் சரணலயம் காடானது. எந்த வித பராமாரிப்போ, எடுக்க ஆள் இன்றியோ புதர் மண்டிக் கிடந்தது பல காலம். அத்ற்குப் பின் அந்தப் பக்கமே போவதற்கு ஏனோ தோன்றியதில்லை.

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) ஈழப் போராட்டத்தில் இணைந்து பரவலாக அறியப்பட்ட மாவீரர் என்பது உலகறிந்தது. அப்போது நான் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ரீயூசன் சென்ரருக்குப் போன தினம் கேணல் கிட்டுவின் வீரமரணச் செய்தி கிட்டுகிறது. சின்னக் கரும்பலகை ஒன்றை எங்கள் CCA கல்வி நிலையத்தில் இருந்து எடுத்து வந்து நண்பர்களோடு சேர்ந்து சோக்கட்டியால்

“கிட்டு அம்மானுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்” என்று எழுதியது இன்னும் பசுமையாக் இருக்கின்றது.

அந்த வார இறுதி எல்லாக் கல்விச் சாலைகளும் மூடப்பட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

சில காலத்துக்குப் பின்னர் நல்லூர் முத்திரைச் சந்தியடியில் தேவாலய வளவுக்கு முகப்பில் எழும்புகின்றது “கேணல் கிட்டு பூங்கா”.

குகைப் பயணம், சறுக்கல், ஊஞ்சல் என்று சிறுவர்ககளுக்கான எல்லா விதமான வித விதமான களியாட்டு வித்தைகள், விளையாட்டுகள் காட்டும் உபகரணங்கள் என்று நேர்த்தியாக அமைக்கப்பட்ட பூங்கா இது. நல்லூர்க் கோயிலில் இருந்து பொடி நடையாக வந்து சேரலாம். அப்போது வளர்ந்தவர்கள் நாம் சிறுவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்து, சீமெந்துப் புட்டிகளில் ஏறி நடந்து விட்டு வருவோம். 95 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையோடு கிட்டு பூங்காவும் வேரோடு பிடுங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்து மக்களுக்கு குறிப்பாக வடமராட்சி தவிர்ந்த பிரதேசங்களில் முக்கிய பொழுதுபோக்கு மையங்களாக இருந்த சுப்பிரமணியம் பூங்கா எண்பதுகளின் முற்பகுதியோடு கோட்டையில் மையம் கொண்ட இராணுவ அச்சுறுத்தலால் கை விட்ட சூழலில், காரைநகர்ப் பக்கம் இருந்த கசூரினாக் கடற்கரை, கீரிமலைக் லடற்கரை போன்றவை கடற்படை அச்சுறுத்தல் போன்றவற்றால் முடக்கப்பட்டிருந்த தமிழரது பொழுது போக்க்கு வாழ்வியலில் நல்லூர்த் திருவிழாவும் பண்டிதர் சரணாலயமும், கிட்டு பூங்காவும் அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள்.

இன்று தமிழரது பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர் மாற்றும் சூழலில் நம் கண்ணுக்கு முன்னே எழுப்பப்பட்டு இருந்த தமிழரது அடையாளங்களைத் தாங்குவது நம் நினைவுகள் மட்டுமே.

கானா பிரபா

இதையும் படிங்க

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

தொடர்புச் செய்திகள்

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன்...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

மேலும் பதிவுகள்

போதைப்பொருள் கடத்தல்காரர் சித்திக்கின் சகாக்கள் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 பவுன் தங்கத்துடன் இருவர் கைது...

ஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்

நடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...

‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...

இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம்

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத்...

உலகத் தமிழர்களின் ஆன்மாவை உலுக்கிய செயல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஸ்ரீறிலங்கா அரசு பாசிசகரம் கொண்டு தனது முகவர்கள் மூலம்...

பிந்திய செய்திகள்

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன்...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

துயர் பகிர்வு