இலக்கியத்திற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு

இவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்  குறித்து இன்று (07) அறிவிக்கப்பட்டது.

தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அகதிகளின் துயரம் மற்றும் காலனி ஆதிக்கத்தின் விளைவுகளையும் சமரசமற்ற வகையில் சித்தரித்தமைக்கு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்