Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டி-20 உலகக் கிண்ணத்தில் ஆப்கான் அணியின் ஆலோசகராக ஆண்டி பிளவர் நியமனம்

டி-20 உலகக் கிண்ணத்தில் ஆப்கான் அணியின் ஆலோசகராக ஆண்டி பிளவர் நியமனம்

1 minutes read

2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) வெளியிட்டுள்ள அறிக்கையில், டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக ஆண்டி பிளவர் குழத்துடன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியது.

ஆண்டி பிளவர் முன்னர்  2009 – 2014 ‍இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இவரது நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அஜிசுல்லா ஃபாஸ்லி, 

ஆண்டி பிளவர் ஆப்கான் அணியுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரது பரந்த அனுபவம் டி-20 உலகக் கிண்ணத்தில் எமக்கு உதவ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

 ஆண்டி பிளவர் ஜிம்பாப்வே அணிக்காக 63 டெஸ்ட் மற்றும் 213 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, சிறந்த விளையாட்டு வாழ்க்கையை கொண்டிருந்தார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More