செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அன்புள்ள இலங்கை அரசாங்கத்திற்கு! | சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய கடிதம்

அன்புள்ள இலங்கை அரசாங்கத்திற்கு! | சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய கடிதம்

1 minutes read
HTML tutorial

அன்பும் பாசமுமும் நிறைந்த இலங்கை அரசாங்கம் அறிவது,

இலங்கை மக்கள் யாருமே நலமாகவில்லை.

ஆனாலும், நீங்கள் மிகவும் நலமாக இருப்பதை “கோட்டை நகரில்” நீங்கள் வாகனம் ஓட்டிப் பார்ப்பதைக் கண்டு தெரிந்தேன்.

மிக்க மகிழ்ச்சியாகவிருந்தது.

வாழ்க வளமுடன், நீங்களும் உங்கள் குடும்பமும்.

இப்பவெல்லாம், நீங்கள் நொடிக்கொரு தடவை அத்தியாவசியப் பொருள்களுக்கு விலை ஏற்றுவதால் மக்கள் கவலை அடைவதில்லை.

ஏன் தெரியுமா..?

எங்கள் மக்கள் பலரிடம் பணம் அறவே இல்லாமல் போய்விட்டது.

பணக்காரர் சிலரிடம் பணம் இருந்தாலும், அது பயனற்ற ஒன்றாகவே அவர்களாலும் உணரப்படுகிறது.

ஏன் தெரியுமா?

அத்தியாவசியப் பொருள்கள் எதுவுமே இங்கில்லாமல் போய்விட்டன.

ஒரு நாடு அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

அல்லது போனால், அதிகளவு உற்பத்தியினை மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானிய வசதி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதில் எதுவுமே நீங்கள் செய்யவில்லை.

இனி இலங்கை மக்கள் வேடுவர் கூட்டமாக வாழப் பழகிவிடுவர்.

அணில், எலி, உடும்பு, மான், மரை, கொக்கு இவற்றையே உணவாக உண்ண மக்கள் பழகிவிடுவர்.

நம் மூதாதையர் இதைத்தானே செய்து வந்தனர்.

நீங்கள் கொண்ட அந்த நட்பினால் இனி எம் மக்கள் பாம்பும் தின்னப் பழகிவிடுவார்கள்.

இதற்காக உலக அரங்கில் ஒரு பாராட்டு விழா செய்தாலும் அது தகும்.

இப்பவெல்லாம் ஊர்க்கொழிகளை மக்கள் மீண்டும் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அதிகாலைப் பொழுதிலும் சேவல்கள் கூவுவதையும் கேட்க முடிகிறது.

தனித்த மாமரத்தில் குருவிகள் விழுந்து சத்தமுடன் சங்கமிப்பதையும் கேட்க முடிகிறது.

ஒற்றை வேம்பிலிருந்து குயிலும் கூவத் தொடங்கிவிட்டது.

இனி உரலிலே அரிசி இடிக்கும் சத்தமும், அம்மியிலே பச்சடி அரைக்கிற சத்தமும் கேட்கத் தொடங்கும்.

பதில் போடவேண்டாம்.

இப்படிக்கு,
நீங்கள் வேண்டாமென்று நினைக்கின்ற
இலங்கை மக்களில் ஒருவன்.

-சமரபாகு சீனா உதயகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.