செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

0 minutes read

வீதி விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தந்தையுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இருவரும் வீதியில் நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.