December 7, 2023 9:00 am

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபச் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

லொறியும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோர விபத்தில் ஓட்டோவைச் செலுத்திச் சென்ற 48 வயதுடைய தந்தையும், அதில் பயணித்த 22 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தனது மகளை வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு ஓட்டோவில் தந்தை அழைத்துச் சென்றபோதே விபத்தில் சிக்கி இருவரும் சாவடைந்துள்ளனர்.

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்