December 2, 2023 10:33 pm

தனுஸ்க குணதிலகவிற்கு எதிரான நீதிமன்ற விசாரணை | திங்கள் ஆரம்பம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக  அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை குறித்த விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார்.

கடந்த வருட ரி 20 உலககிண்ணப்போட்டிகளிற்காக  இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை சிட்னியின் கிழக்கி;ல் உள்ள புறநகர் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை தனுஸ்க எதிர்கொண்டு;ள்ளார்.

திங்கட்கிழமை ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணையை தனுஸ்க எதிர்கொள்ளவுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக அவரது சட்டத்தரணிகள் இன்று தயாராவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனுஸ்க குறிப்பிட்டபெண்ணை டேட்டிங் செயலியில் சந்தித்தார்,அதன் மூலம்பல தடவை உரையாடிய அவர்கள் நவம்பர் 2ம் திகதி சந்தித்தனர் அன்றே அந்த சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நகரில் இருவரும் மது அருந்திய பின்னர் அந்த பெண்ணிண் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர் அங்கு தனுஸ்க பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வழக்கு விசாரணை மூன்று அல்லது நாட்கள் நீடிக்கும் – சிங்கள மொழிபெயர்ப்பாளர் ஒருவர் விசாரணைகளிற்கு உதவுவார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்