Monday, September 20, 2021

இதையும் படிங்க

“நயன்தாரா கொடுத்த தைரியம்”- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் 'கூழாங்கல்'. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்' விருதை...

‘சினிமா எனக்கு அலுக்கவே இல்லை!’ | ராதாமோகன் செவ்வி

“சினிமா எனக்கு அலுக்கவே இல்லை!” வைபவ் - வாணி போஜன்

‘யாழ் தேவி பாடல் ஈழத் தமிழரின் அடையாளம்’ | கவிஞர் வசீகரன் வணக்கம் லண்டனுக்குச் செவ்வி

'யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்வோம்...' பாடல் வழியாக இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் அறிமுகமானவர் வசீகரன். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வசீகரன், தன்னுடைய 17ஆவது வயதில் நோர்வேயிற்குப் புலம்பெயர்ந்தவர். காதல்...

உணர்ச்சிகளால் ஒரு சர்க்கஸ்! | ‘மண்டேலா’ நாயகி ஷீலா ராஜ்குமார் நேர்காணல்

‘திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கக் கூடிய படம்’ என்று விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘மண்டேலா’. தேர்தல் அரசியலில்,...

‘கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்கு’ | ஜஸ்மின் சூக்கா நேர்காணல்

நேர்காணல்:- ஆர்.ராம். பாரிய மனித உரி­மைகள் மீறல்­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளிகள் ,அர­சாங்­கங்கள் மற்றும் அவற்றின் கட்­ட­மைப்­புக்கள் அமெ­ரிக்க அரச...

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நீதி, நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல | பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செவ்வி

நேர்காணல்:- ஆர்.ராம் படப்பிடிப்பு:- ஜோய் ஜெயக்குமார்   • ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்...

ஆசிரியர்

கமல் அப்பாதான் நான்… பரமக்குடி சீனிவாசன்: 83இல் வந்த பேட்டி

கமல்

“என் மகனிடம் பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்!” – கமலின் தந்தை  

சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறதுக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, ‘நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே’னு அடிக்கடி வருத்தப்படுவான்.

சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தது, அமைதியை அணிந்திருந்த அந்த வீடு.

”மகனுக்குத் தேசிய அவார்டு (‘மூன்றாம் பிறை’) கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!”

”சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி.சீனிவாசன்.

”உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வருவார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?”

”நிச்சயமா! நேத்துகூட ‘Oh my boy, you deserve oscar’னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!”

”இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி…”

”கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா சொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை!”

கமல்
கமல்

”சரி, சிறுசா சொல்லிக்கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே..?”

”சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறதுக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, ‘நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே’னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச் சோர்வுக்கு டானிக் கொடுத்து, உற்சாகம் ஊட்டுவேன். ‘நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்’ என்கிற வாசகத்தைக் திருப்பித் திருப்பி நினைவுபடுத்துவேன். அவனோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குதான் இந்த வெற்றியில் பெரும் பங்கு உண்டு!”

”கமல் வளர்ச்சியில் உங்க மனைவிக்குப் பெரும்பங்கு உண்டுனு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?”

”எங்க குடும்ப நண்பராக நெருங்கிப் போயிருந்த டி.கே.சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம்; ஹாஸ்பிடலில் ஆபத்தான கட்டத்தில் இருந்த என் மனைவி என்னைக் கூப்பிட்டு, ‘நான் சாகறதுக்கு முன்னால டி.கே.சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்’னு கெஞ்சினா. ஒரு டாக்ஸியில் கொண்டு போய் அவர் வீட்டில் விட்டேன்.

‘அய்யா! நாங்க பணக்காரங்கதான். ஆனாலும், உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க! நீங்க சரின்னு சொல்லிட்டா, நான் நிம்மதியா உயிர் விடுவேன்’னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.

உடனே அவர், ‘கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல மட்டுமல்ல; என் குடும்பத்திலேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டு’ன்னு உருக்கமாகச் சொன்னார்.”

சினி ஃபீல்டுல நுழையறப்போ ‘மது, புகையிலை, மாது… இந்த மூணுக்கும் இடம் கொடுக்கமாட்டேன்’னு பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன்

” ‘அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவை விட அதிகமா நான் சந்தோஷப்படறேன்’னு கே.பாலசந்தர் சொல்லியிருந்தாரே… படிச்சீங்களா?”

”படிச்சேன்! உடனே கே.பிக்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன். ‘நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னை விட நீங்க அதிகம் சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’ன்னு எழுதினேன்.

ஆரம்ப காலத்துல கே.பி.யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியாமல் போயிடுச்சு. ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு!”

தன் மகனின் இந்த வளர்ச்சியில், கே.பியின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.

”கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகள் அதிகம் பண்ணியிருப்பாரே?”

”ஆமாம். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களின் ஆக்டிவிட்டீஸை உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு, அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம், நானும் என் மனைவியும் அவனைப் பக்கத்தில் இருத்தி, ‘மிமிக்ரி’ செய்யச் சொல்லி ரசிப்போம்!

இங்குள்ள என் நண்பரின் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், ‘நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளே விடறியா? இல்லாட்டி டிஷூம்… டிஷூம்தான்’னு கையக் கால உதைப்பான்.”

”நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது…”

”ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னை நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்.”

”உங்ககிட்டே அவ்வளவு பயமா?”

”அப்படித்தான்னு நினைக்கிறேன்.”

”கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?”

”சினி ஃபீல்டுல நுழையறப்போ ‘மது, புகையிலை, மாது… இந்த மூணுக்கும் இடம் கொடுக்கமாட்டேன்’னு பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன். முதல் ரெண்டுக்குதான் சம்மதிச்சான். ஆனாலும், அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்!”

”திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கிற இன்டெலக்சுவல் ஃபாதர் என்ற முறையில் கேட்கிறேன். ஸைக்கலாஜிக்கலி, குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?”

கமல்

”குழந்தை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற காலத்தில் தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, இப்படித்தான் இவனை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு நம்பிக்கையோடு வளர்த்தால், நாட்டில் ஜீனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்.”

வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது, ”ஐயம் சீனிவாசன்! அட்வகேட் அட் பரமக்குடி”ன்னு சொன்னாராம் இவர். பக்கத்தில் இருந்தவர், ‘கமலஹாசன் ஃபாதர்’ என்று கிசுகிசுத்தவுடன், கவர்னர் ”ஓ..! யூ ஆர் கமல்ஸ் ஃபாதர்?!” என்று உற்சாகத்தோடு கேட்டாராம். உடனே, ”நோ! மை சன் ஈஸ் கமல்!” என்று கூறி, அங்கு இருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.

”நீங்க கமல் அப்பா இல்லை; உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல்ல நிரூபிச்சிட்டீங்க” என்று சொல்லி, விடைபெறுகிறோம். மழலையாய்ச் சிரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கிறார்.

– நெல்லை குரலோன்

| ஆனந்த விகடன் 25.5.1983 இதழில் இருந்து |

இதையும் படிங்க

கர்ப்பிணிகளும் கொரோனாவும்! | மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர்

கர்ப்பிணிப்பெண்ணாக இருந்தாலும் சாதாரண ஒருவராக இருந்தாலும் கொரோனா சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ...

‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’ | நடிகை வாணிபோஜன் பேட்டி

வாணிபோஜன் தினமும் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு...

பணக்காரர் ஆவது எப்படி? எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம்? – பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

"ஒருவர் தன் வருவாயில் 30 சதவீதத்தை நிச்சயம் சேமித்தே ஆக வேண்டும். சேமிக்க முடியாதவர்கள் என்று யாருமே கிடையாது. சேமிக்காதவர்கள் சிரமப்படுவார்கள்" என்கிறார்...

”கோட்டாபயவின் பயணம் இராணுவ ஆட்சி நோக்கியே” | விஜித ஹேரத் எம்.பி செவ்வி

நேர்காணல் :- ஆர்.யசி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராணுவ மனநிலையே காணப்படுகின்றது. அதனால் தான் என்றும் இல்லாத அளவிற்கு இராணுவ...

‘வாழ்’ சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை | இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

'அருவி' பட வெற்றி பெற்று கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் 'வாழ்' கதையோடு வந்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்....

இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல ‘கருத்து சுதந்திரம்’ | இயக்குனர் ரஞ்சித்

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

தொடர்புச் செய்திகள்

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...

கவுண்டமணியின் சினிமாப் பக்கம்

கவுண்ட்டர் மணி கவுண்ட்டர் மணி தான்... கால போக்கில் மருவி கவுண்டமணி ஆனது. பெரும்...

சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள் – சிவகுமார்

சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள் என முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் காட்டமாக பேசியுள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார்.

திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

மேலும் பதிவுகள்

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடு!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு  தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு ஆலோசனை வழங்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

மூன்றாவது டி-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு...

சல்யூட் அடிக்காத காவல்துறைமீது கோபப்பட்ட பிரபல நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் தனக்கு மரியாதை கொடுக்காத போலீஸ் அதிகாரி மீது கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாள நடிகரும்,...

1985: இலங்கையில் இந்தியா | யூட் பிரகாஷ்

Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல்...

கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு: சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

கொரோனாவைிடவும் கொடூரமாக உருமாறி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இனவழிப்புக்கான நீதிக்கான...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பரத் திரைப்படம்

ஷரங் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு