செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் திருமணம் கைகூட…!

திருமணம் கைகூட…!

1 minutes read

சோழ நாட்டின் பாடல் பெற்ற எதிர்கொள்பாடி என்கிற மேலைத் திருமணஞ்சேரி தலம், காவிரியின் வடகரைத் தலங்களில் 24-ஆவது தலம்.

“சிவனின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி தேரழுந்தூரில் வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்தில் வழிபட்டபோது, குளம்பின் காலடி லிங்கத்தில் பட்டு வடு ஏற்பட்டது. திரு ஆடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது. இத்தலத்தில் பரத்வாஜ முனிவரின் யாகத்தில் குழந்தையாகத் தோன்றி, அன்னை வளர்ந்தார். பருவம் அடைந்ததும், திருமணஞ்சேரியில் திருமணம் புரிய வந்த சிவனை மாமனார் பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்றது எதிர்கொள்பாடி. திருமண வேள்வி நிகழ்ந்தது திருவேள்விக்குடி, திருமணம் நடந்தது திருமணஞ்சேரி’ என புராணம் கூறுகிறது.

“காசியில் தரிசனம் முடிந்து திரும்பினார் துர்வாச முனிவர். அவருக்கு எதிரே இந்திரனும், ஐராவதமும் வர முனிவர் தன்னிடம் இருந்த பூஜித்த தாமரை மலரைப் பரிசாகத் தந்தார். அதனைப் பெற்ற இந்திரன் தனது யானை மீது வைத்தார். மலரில் வண்டுகள் மொய்த்ததால், ஐராவதம் அம்மலரை வீசி கீழே தள்ளியது. இதனால் கோபம் கொண்ட முனிவர், இந்திரனுக்கு நோய் பீடிக்கவும், ஐராவதம் காட்டுயானையாகவும் சாபமிட்டார். இருவரும் பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்து, எதிர்கொள்பாடிக்கு வந்தனர். இங்கே காட்டுயானை தீர்த்தம் உருவாக்கிட, இருவரும் வணங்கி வழிபட்டனர். இந்திரனின் சாபம் நீங்கியது. காட்டுயானை ஐராவதமானது. இறைவன் ஐராவதத்தின் பெயரைத் தாங்கி ஐராவதீஸ்வரர் ஆனார்’ என்று தல வரலாறு கூறுகிறது.

கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கருங்கல்லால் கட்டியவர் கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்ட சேரமான் சோழன். மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்தவர் தொண்டை மண்டலத்து குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியார்.

மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளே கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி, நேர் எதிரே ஐராவதேஸ்வரர் சதுரவடிவ ஆவுடையாரில் மேற்கு முகமாய் காட்சி அருளுகிறார். இவருக்கு மத்யானேஸ்வரர் என்ற திருப்பெயரும் உள்ளது. தலமரம் பன்னீர் மரம். தலத் தீர்த்தம் ஐராவதத் தீர்த்தம்.

1879-இல் அருணாசலம் பிள்ளை குமாரரர்கள் 35 ஏக்கர் நிலம் எழுதி வைத்து குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளனர். அதுமுதல் ஆறு தலைமுறைகளாக இன்றும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். “இங்கு வழிபட நல்ல வரன் அமையும். தம்பதியருக்குப் பிணக்கு தீரும். இழந்தப் பதவியை பெறலாம்’ என்பது ஐதீகம்.

மயிலாடுதுறை} குத்தாலம் வழித்தடத்தில், குத்தாலத்தில் இருந்து அஞ்சலாறு வழியே மேலைத் திருமணஞ்சேரி வரலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.