Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இந்தியா அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு!

இந்தியா அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு!

1 minutes read

இந்த அணியில், கடந்த இரு போட்டிகளில் இடம்பெற்றிருந்த டொமினிக் சிப்ளி மற்றும் ஜெக் கிரெவ்லி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலாக டாவிட் மாலன் மற்றும் சகீப் மொஹமட் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தோள்பட்டையில் உபாதைக்குள்ளான வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் விபரத்தை பார்க்கலாம்,

ஜோ ரூட் தலைமையிலான அணியில், மொயின் அலி, ஜேம்ஸ் எண்டர்சன், ஜோனாதன் பேயர்ஸ்டொவ், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், ஹசீப் ஹமீட், டேன் லோரன்ஸ், சகீப் மொஹமட், டாவிட் மாலன், கிரைஜ் பிரத்வெயிட், ஒல்லீ போப், ஒல்லீ ரொபின்சன், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் போட்டி சமநிலையில் நிறைவடைய இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 151 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி லீட்ஸ்- ஹெடிங்லீ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More