செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ்: நூறாவது வெற்றியை பதிவு செய்தார் ஹமில்டன்!

ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ்: நூறாவது வெற்றியை பதிவு செய்தார் ஹமில்டன்!

1 minutes read

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 15ஆவது சுற்றான ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று சோச்சி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 309.745 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் 41.001 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது. இது ஹமில்டனின் 100ஆவது வெற்றியாகும்.

அவரை விட 53.271 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

62.475 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் வீரரான கார்லோஸ் செய்ன்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள பதின்னைந்து சுற்றுகளின் முடிவில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஐந்து வெற்றிகளுடன் 246.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஏழு வெற்றிகளுடன் 244.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், 151 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த பதினாறாவது சுற்றான துர்கிஷ் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; ஒக்டோபர் 10ஆம் திகதி, இஸ்தான்புல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.