செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான வெற்றி!

ஐ.பி.எல்.: பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான வெற்றி!

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 52ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 44 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் கார்டன் மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தேவ்தத் படிக்கல் 41 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஜேஸன் ஹோல்டர், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More