Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது மும்பை!

ஐ.பி.எல்.: பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது மும்பை!

2 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றிருந்தாலும், பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 84 ஓட்டங்களையும் சூர்ய குமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் ரஷித்கான் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் உம்ரான் மலிக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மனிஷ் பான்டே 69 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம், நதன் குல்டர் நெய்ல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் மற்றும் பியூஸ் சவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இசான் கிசான் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More