இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் யூ. எல். ஜஸ்வரும் இளம் வர்த்தக பிரமுகர் தக்ஷித சுமதிபாலவும் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் இருவர் தலைமையில் தலா 13 பேர் கொண்ட வேட்பு மனுக்கள் தேர்தல் குழுவினரிடம் சனிக்கிழமை (19) பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி யூ. எல். மஜீத் தலைமையிலான மூவர் கொண்ட குழுவினர் வேட்பு மனுக்களை பொறுப்பேற்றனர்.
தேர்தல் குழுவில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து, பொதுநிருவாக சேவைகள் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி உபாலி குணசேகர ஆகியோரும் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். இக் குழுவினர் கடந்த தேர்தலின்போது தேர்தல் குழு உறுப்பினர்களாக கடமையாற்றி இருந்தனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பல்வேறு பதவிகளை வகித்த பலர் ஜஸ்வர் தலைமையில் 13 பேரைக் கொண்ட வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் தக்ஷித தலைமையில் 13 பேரைக்கொண்ட வேட்பு மனுவில் புதுமுகங்கள் பலர் இடம்பெறுகின்றனர்.
செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள்
ஜஸ்வர் குழுவினர்
தலைவர் பதவி: யூ.எல். ஜஸ்வர் (இ.கா. மத்தியஸ்தர்கள் சங்கம்)
உதவித் தலைவர்கள் பதவி (4)
ரஞ்சித் ரொட்றிகோ (நீர்கொழும்பு கால்பந்தாட்ட லீக்)
டொக்டர் மனில் பெர்னாண்டோ (களுத்துறை கா. லீக்)
சமன் டில்ஷான் நாகாவத்த (காலி கா. லீக்)
கே.எம்.பி.பி. கருணாதிலக்க (இலங்கை கடற்படை கா. லீக்)
உறுப்பினர்கள் பதவி (8)
ஏ.டபிள்யூ. அப்துல் கபார் (மாவனெல்லை கா. லீக்)
ஜகத் டி சில்வா (நாவலப்பிட்டி கா. லீக்)
சய்ப் யூசுப் (வர்த்தக கா. லீக்)
எம்.ஐ.எம். அப்துல் மனாப் (அம்பாறை கா. லீக்)
ஏ. நாகராஜன் (வவுனியா கா. லீக்)
இந்திக்க தேனுவர (மாத்தறை கா. லீக்)
எம். சீ. எம். ரிஸ்வி (கிண்ணியா கா. லீக்)
சி. தீபிகா குமாரி (பியகம கா. லீக்)
தக்ஷித சுமதிபால குழுவினர்
தலைவர் பதவி: தக்ஷித சுமதிபால (அநுராதபுரம் கா. லீக்)
உதவித் தலைவர்கள் பதவி (4)
ரோஹித்த பெர்னாண்டோ (வென்னப்புவை கா. லீக்)
ரி. ஜ. உடுவர (வத்தளை கா. லீக்)
பீ.ஜி.பீ. பீரிஸ் (தெஹிவலை கா. லீக்)
ஜகத் ரொஹன (தேசிய சேவைகள் கா. சங்கம்)
உறுப்பினர்கள் (8)
ஆர். ஏ. தரங்க (தெனியாய கா. லீக்)
நிஹால் பெரேரா (வத்தளை கா. லீக்)
ரீ. சுதாகர் (தேசிய சேவைகள் கா. சங்கம்)
சமீர அக்மீமன (பொல்காவலை கா. லீக்.)
சுனில் கன்ஹேவா (வென்னப்புவை கா. லீக்)
என்.எஸ்.பி. திசாநாயக்க (இலங்கை பாடசாலைகள் கா. சங்கம்)
லியோ பெர்னாண்டோ (பொல்காவலை கா. லீக்)
ஹஷினி ஆரியரட்ன (தெனியாய கா. லீக்.)
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதி விசேட பொதுக் கூட்டத்தின்போது மூவர் கொண்ட மேன்முறையீட்டுக் குழு பெயரிடப்பட்டது.
மேன்முறையீட்டுக் குழுவில் ஒய்வுபெற்ற நீதிபதி சரத் கருணாரட்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சிரேஷ்ட சட்டத்தரணி சமன் ஜயசூரிய ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.