December 2, 2023 12:49 pm

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் | நிராகரித்தார் பிரமோதய

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களாக முன்வைக்கப்பட்டுவந்துள்ள குற்றச்சாட்டுகள்  உண்மைக்கு புறம்பானவை என தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவை  என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை கிரிக்கெட்டை வீழ்ச்சியடையச்செய்வதை நோக்கமாக கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டில் அதிகாரத்திற்காக முயலும் சிலர்  சூதாட்ட சிலர் மற்றும் தேசிய அணிக்குள் நுழைய முயலும் சிலர் குறித்து தெரிவுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் அவலநிலைக்கு நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் சதிதிட்டம் காரணம் எனநான் நம்புகின்றேன்  தெரிவித்துள்ள அவர் இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடைக்கும் இந்த சதியே காரணம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றவே இந்த சதிகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இந்த தரப்பினர் கிரிக்கெட்டை காப்பாற்ற முயல்வது சமூகத்தை திறமையாக தவறான விதத்தில் வழிநடத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்