காலநிலை உங்கள் வார்த்தைகளில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் தானே…? ஏதோ ஒரு மலைவாசற்தலத்தில் ஒரு மெல்லிய தூரலில் நீங்கள் ஒரு உரையாடலை நிகழ்த்தும்போது நிச்சயம் வார்த்தைகள் தடிக்காது. ஒருவேளை பல ஆண்டுகள் கழித்து உங்கள் எதிரியாக நீங்கள் நினைக்கும் நண்பரை அப்படியான இடத்தில் சந்தித்தால் நீங்கள் முகமன் கூறுவீர்கள். நட்பு பாராட்டினாலும் ஆச்சர்யப்படுதவற்கு இல்லை. அதே நேரம், வெம்மையான வெயிற் காலத்தில் ஒரு இறுக்கம் நிலவும். அது வெட்கை தரும் இறுக்கம். இதை மேம்போக்காகச் சொல்லவில்லை… இது குறித்து ஆய்வுகள் நடைபெற்று இருக்கின்றன. ஜான் க்ரோகல் என்னும் மேற்கத்திய உளவியல் நிபுணர் இது குறித்து விரிவான ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். சரி… சரி… நாம் விஷயத்துக்கு வருவோம்… சரியாக 17 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரு வெயிற்காலத்தில் நேருக்கு நேர் சந்தித்து கொண்டதால்தானோ என்னவோ அங்கே இறுக்கம் நிலவியது. அவர்கள் முகமன் கூறிக்கொள்ளவில்லை.
ஆம், தி.மு.க ஆட்சி பொற்றுபேற்று சரியாக 12 நாட்கள் ஆகி இருக்கும்… காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், “கடந்த அ.தி.மு.க அரசு, மத்திய அரசை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு 1000 கோடி ஒதுக்கி இருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டம் குறித்த அறிக்கையை அனுப்பவில்லை” என்று தன் உரையைத் தொடங்கினார். இந்த உரைக்கு அவையில் இருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மைக்கை தூக்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது எரிந்தார். அப்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேகர் பாபு கோபமாக முதல்வர் கருணாநிதியை நோக்கிச் சென்றார். சட்டமன்றமே அல்லோலப்பட்டது. 59 அ.தி.மு.க உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஜெயலலிதா வெகுண்டெழுந்தார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, “இது அநீதி. நான் சட்டமன்றம் செல்லப்போகிறேன்” என்று அறிவித்தார். அவையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்… ஜெயலலிதா மட்டும் தனியாக மே 27, 2006 சனிக்கிழமை சட்டமன்றம் சென்றார்.
“தனி ஒருவர்… முப்பது நிமிட உரை”
சரியாக காலை 9.28 மணிக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஜெயலலிதா, தனியாக அவைக்குள் சென்றார். வளாகத்தில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையில் இத்தகைய சூழலை எதிர்பார்க்கவில்லை. கடைசியாக ஜெயலலிதா – கருணாநிதி என இருவரும் அவையில் இருந்தது மார்ச் 25, 1989-ம் ஆண்டு. அன்று நிகழ்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வில்தான் கருணாநிதி கையிலிருந்த பட்ஜெட் உரை பிடுங்கப்பட்டு கிழிக்கப்பட்டது. ஜெயலலிதா, தான் தாக்கப்பட்டதாகக் கூறி அவையிலிருந்து வெளியேறினார். அதன்பின் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கருணாநிதி அவைக்கு வரவில்லை. பின் கருணாநிதி முதல்வரக இருந்தபோது ஜெயலலிதாவும் அவைக்கு வரவில்லை. இது நடந்து 17 ஆண்டுகளுக்குபின் ஜெயலலிதாவும்-கருணாநிதியும் அவையில். ஜெயலலிதா அவையில் நுழைந்த சிறிது நேரத்தில் கருணாநிதி வந்தார். அனைத்து உறுப்பினர்களும் எழ, ஜெயலலிதா தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். பிற அ.தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஜெயலலிதா இருக்கைக்கு பின் இருந்த இருக்கைகள் காலியாக இருந்தன.
சபாநாயகர் ஆவுடையப்பனிடம் 95 நிமிடங்கள் பேச அனுமதிகேட்டார் ஜெயலலிதா. முப்பது நிமிடங்கள் வழங்கப்பட்டது. புள்ளிவிவரத் தகவல்களுடன் உரையைத் தொடங்கினார் ஜெயலலிதா. புள்ளிவிவரங்கள் மட்டும் இல்லை. அதனுடன் தி.மு.க-வைக் கோபபடுத்தும் ‘மைனாரிட்டி அரசு’ என்ற பதமும் இருந்தது. இந்த வார்த்தையைத் தன் உரையின்போது அழுத்திக் கூறினார் “தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகள் 86 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவசம் நிலம் தருவதாக கூறி இருக்கிறது. இதற்கு 50 லட்சம் ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமாக 3.5 லட்சம் எக்கர் நிலம்தான் இருக்கிறது. மீதம் உள்ள 46.5 லட்சம் ஏக்கர் நிலத்தை யாரிடமிருந்து கைப்பற்றப்போகிறது? ஏழை மக்களிடமிருந்தா?” என்று கேள்வி எழுப்பியவர். மீண்டும் தொடர்ந்தார், “86 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவசம் நிலம் தருவதாக 1.72 கோடி ஏக்கர் நிலம் தேவை நீங்கள் கூறுவது போல் 50 லட்சம் ஏக்கர் நிலம் இல்லை”
அமைச்சர்கள் குறிக்கிட்டனர். ஜெயலலிதா அதைப் பொருட்படுத்தாமல் உரையைத் தொடர்ந்தார். உன்னிப்பாக உரையைக் கவனித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி…
அடுத்து, “கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போதே கட்டாயமதமாற்றத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் அதை ரத்து செய்யபோவதாகக் கூறுகிறீர்கள். புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் ஏன் புதைக்க வேண்டும்?” என்றார்.
அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, “அதன் இறப்பு குறித்து சந்தேகம் இருந்ததால், அதை மீண்டும் தோண்டி எடுத்துள்ளோம்” என்று பதிலளித்தார்.

இப்படியாக அந்த 30 நிமிடங்களும் குளிரூட்டப்பட்ட சட்டமன்ற அறையின் குளிர்ச்சியைத் தாண்டி விவாதம் உஷ்ணமாகச் சென்றது.
அவை நேரம் முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், “எங்கள் கட்சியைச் சேர்ந்த 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான் மட்டும்தான் என் கட்சி சார்பாக இருக்கிறேன். அதனால், எனக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நான் கேட்ட நேரத்தை வழங்கவில்லை. இது ஜனநாயகப் படுகொலை” என்றார். அதன் பின் அவர் அந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை.
‘மனகசப்பை கொண்டு வந்த கருத்துக்கணிப்பு’
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் அவர்கள் வாக்குறுதி கொடுத்ததுபோல் தொலைக்காட்சிப் பெட்டிகளை விநியோகிக்கத் தொடங்கினர். பொறுபேற்ற அன்றே கிலோ இரண்டு ரூபாய் அரிசி திட்டத்துக்கு கையொப்பமிட்டிருந்தார் கருணாநிதி. எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது அந்தக் கருத்துக்கணிப்பு வரும் வரை. கருணாநிதி குடும்பத்துக்குச் சொந்தமான “தினகரன்” நாளிதழில் கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற தொணியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 70 சதவிகிதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கும், 2 சதவீதம் பேர் அழகிரிக்கும் ஆதரவாக வாக்களித்திருப்பதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தார்கள். மதுரையில் தினகரன் அலுவலகம் மே 9-ம் தேதி தாக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து அலுவலகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் எரியப்பட்டது. மூன்று ஊழியர்கள் இறந்தார்கள்.
இது தொடர்பாக அழகிரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யவேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தயாநிதி மாறன் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக பேச்சுகள் உலாவின. தி.மு.க உயர்மட்டக் குழுக் கூட்டம் கூடியது. தயாநிதிமாறன் கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுப்படுவதாக விவாதிக்கப்பட்டது. தயாநிதி மாறன் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார்… கருணாநிதி குடும்பத்தில் விரிசல் விழுந்தது.
இதைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அ.தி.மு.க திட்டமிட்டது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம்… மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் வெளியாகின!
தொடரும்…
நன்றி : ஆனந்த விகடன்
முன்னைய பகுதிகள் :
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/
http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-32-12-19-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-33-01-04-18/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-34-01-11-18/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-35-01-19-18/

