Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

உலகின் மிகப் பெரும் இடப்பெயர்வு | தீபச்செல்வன்

உலகில் இடப்பெயர்வுகளினால் பெரும் அலைதலுக்கும் உலைதலுக்கும் ஆளான இனம் ஈழத் தமிழ் இனம். நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்காக போராடிய ஈழத் தமிழ் மக்கள்...

இனி வரும் காலத்திற்காய் | பேஸ்புக்கின் ‘meta – மீ!’ | மதுரன் தமிழவேள்

ஃபேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. 'அதற்குத் தமிழில் பெயர் வைக்கப்போகிறோம் என்று ஒரு சாரார் கிளம்பி...

தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில்,...

வியப்பூட்டும் உண்மை வரலாறு | மலையூர் மம்பட்டியான் நிஜக்கதை

சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான்.*

சிவபூமியை சிங்கள பூமி ஆக்கும் போர்? | தீபச்செல்வன்

அண்மையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நவராத்திரி தின நிகழ்வுகளில், இந்திய அரசின் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது மனைவியுடன்...

1996 உலககோப்பை அரையிறுதிப் போட்டி | யூட் பிரகாஷ்

முன்னோட்டம் சில சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை வாழ்வில் மறக்கவே முடியாது. சாகும் வரை அந்த ஆட்டத்தில் நடந்த...

ஆசிரியர்

தேர்தலை குழப்ப புலிகள் வன்முறையையும் பாவித்ததுண்டு; ஏன்?: நிலாந்தன்

பகிஸ்கரிப்பு எனப்படுவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை புதியது அல்ல. ஆயுதப் போராட்டம் பலமாக இருந்த கால கட்டங்களில் விடுதலை இயக்கங்கள் பகிஸ்கரிப்பை தமது எதிர்ப்பு முறைகளில் ஒன்றாக பயன்படுத்தின.

குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் பெரும்பாலான தேர்தல்களை அனுமதித்ததில்லை. அதேசமயம் படைத் தரப்பின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவர்கள் தேர்தலை குழப்புவதுண்டு.

அவ்வாறு குழப்புவதற்கு அவர்கள் வன்முறையை பிரயோகிப்பதும் உண்டு. மிக அரிதான சந்தர்ப்பங்களிலேயே ஆயுதப் போராட்டமானது தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாக பயன்படுத்தியது உண்டு. மற்றும்படி பகிஷ்கரிப்பு எனப்படுவது தமிழ் ஜனநாயக மரபில் ஒரு தொடர்ச்சியான இயல்பாக காணப்படுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய முதலாவது இளையோர் அமைப்பாகிய யாழ் இளைஞர் காங்கிரஸ் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை பகிஷ்கரித்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காரணத்தால் பூரண சுயாட்சி தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து இலங்கைத் தீவின் முதலாவது மக்கள் வாக்கெடுப்பை யாழ் இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது இது நடந்தது 1931 இல்.

அதிலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் பல தேர்தல்களை புறக்கணித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்புறக்கணிப்புகளில் அதிகமாக விவாதிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்புதான். அதில் புலிகள் இயக்கம் ரணிலை தோற்கடிப்பதற்காக தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களை கேட்டது. அதன் விளைவாக மஹிந்த ஆட்சிக்கு வந்தார். அவர் யுத்த களத்தில் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தார்.

இது காரணமாக அப் பகிஷ்கரிப்பு இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. தேர்தலைப் பகிஷ்கரித்ததன் மூலம் புலிகள் இயக்கம் தம்மை அழிக்கும் ஓர் எதிரியை தாமே தேர்ந்தெடுத்தது என்று இப்பொழுது விமர்சிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல அந்தப் பகிஷ்கரிப்பின் விளைவுகளே கடந்த 15 ஆண்டுகால தமிழ் மக்களின் அரசியலை தீர்மானித்து வருகின்றன. இப்பொழுது வந்திருக்கும் ஜனாதிபதி தேர்தலையும் அதுதான் தீர்மானிக்கிறது.

யுத்த வெற்றிக்குத் தலைமை தாங்கும் ராஜபக்ஷ குடும்பம் மறுபடியும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது. யுத்த வெற்றியே அவர்களுடைய அரசியலுக்கான முதலீடு. யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கும் ஒரு கட்சி யுத்தக் குற்றங்களை விசாரிக்க ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்தகாலத்தை விசாரிப்பதற்கு ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறத் தயாராக இருக்காது. அதைத்தான் கோத்தபாய செய்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் ஒன்றில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று கூறப்படுகிறது. தேசத்துக்கு பொறுப்புக்கூறல் என்றால் என்ன? அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டேன் என்று பொருள். அதாவது ஐ.நா.வின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்துக்கு பொறுப்புக் கூற மாட்டேன் என்று பொருள்.

முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் ஸ்தாபிப்பதற்குரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் பிரயோக நிலையில் சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். அதாவது இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறுவதன் மூலம் நிகழ்காலத்துக்கு வருங்காலத்திலும் பொறுப்பாக நடந்துகொள்வது.

ஆனால் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் கோட்டாபய என்ன கூறினார்? இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் வைத்தும் அவர் அதைத்தான் கூறினார்.

இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவது என்பது தமிழ் மக்களைப் பொருத்தவரை நீதியின் தொடக்கமாகும். இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுவது நான் பொறுப்பு கூறமாட்டேன் என்பதன் மறுபக்கம் தான்.

கோட்டாபய பகிரங்கமாக கூறுகிறார் உலகத்துக்கும் உலகத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் தான் பொறுப்பு கூறப்போவதில்லை என்று. தேசத்துக்கு மட்டுமே அவர் பொறுப்பு கூறுவார். இங்கே தேசம் என்று கருதப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசு கட்டமைப்புத்தான் அதற்குத்தான் அவர் பொறுப்பு கூறுவார்.

இவ்வாறு பகிரங்கமாக ஓர் அனைத்துலக தீர்மானத்தை மீறப்போவதாக அவர் கூறுகிறார். அதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவை நியாயப் படுத்தலாமா? என்று ஒரு கிறிஸ்தவ மதகுரு கேட்டார். சிவில் சமூக பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கேட்டார்.

பகிஸ்கரிப்பு என்ற தெரிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர வேறு யாரும் முன் நிறுத்தவில்லை. கோட்டாவும் சஜித் பிரேமதாசவும் அனுரகுமாரவும் இனப்பிரச்சினைக்கான ஒரு துணிச்சலான தீர்வை முன்வைக்க தயங்கும் ஒரு பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கிறது. ஏற்கனவே அக்கட்சி மாகாணசபை தேர்தலை புறக்கணித்திருக்கிறது.

ஆனால் தேர்தல் பகிஷ்கரிப்பு எனப்படுவது ஒரு கோரிக்கை மட்டுமல்ல. ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் யாழ் இளைஞர் கொங்கிரஸ் குடாநாட்டுக்குள் நடத்திக் காட்டியதை போல அது ஒரு கூட்டு அபிப்பிராயமாக மாற்றப்பட வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு பகிஸ்கரிப்பு அலை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இப்போது இருக்கும் தேர்தல் களநிலவரங்களின்படி பகிஷ்கரிப்பு அலை எனப்படுவது எல்லாவிதத்திலும் ஒரு தேசிய அலைதான். அப்படி ஒரு அலையை தோற்றுவிக்க மக்கள் முன்னணி தயாரா? கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு ஹண்டி பேரின்பநாயகம் அப்படியோரு அலையை தோற்றுவித்த பொழுது ஜிஜி பொன்னம்பலம் அதற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டார்.

அப்பொழுது இணைந்திருந்த முல்லைத்தீவு மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் தோல்விக்குக் காரணம் மதரீதியான வாக்குகளே. பகிஷ்கரிப்பு அல்ல. ஹண்டி பேரின்பநாயகத்தின் பகிஸ்கரிப்பு அலை குடாநாட்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் முதலாவது தேர்தல் பகிஷ்கரிப்பின்போது அதை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜி.ஜி. பொன்னம்பலத்தின் பேரன் இப்பொழுது மற்றொரு தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் அவருடைய கட்சியைத் தவிர ஏனைய எல்லா கட்சிகளும் பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக இல்லை. பெரும்பாலான கருத்துருவாக்கிகளும் அதற்கு ஆதரவாக இல்லை. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவாக இல்லை. ஏன் ஆதரவாக இல்லை?

ஏனெனில் அது மேற்கு நாடுகளுக்கு எதிர்மறையான ஒரு செய்தியை கொடுத்துவிடும் என்று ஒருபகுதி விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே செயல் வழி தேர்தல்தான். அந்த வழியையும் அடைந்து விட்டால் தமிழ் மக்கள் அரசியல் செய்வதற்கு வேறு வழி உண்டா என்று வேறு ஒரு பகுதி விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் பகிஷ்கரிப்பு என்றால் அதைச் சில குண்டுகளை வீசுவதன் மூலமோ அல்லது சில வேட்டுக்களை தீர்ப்பதன் மூலமோ செய்து விடலாம். ஆனால் இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லை. எனவே முழுக்க முழுக்க மக்களை அரசியல் விழிப்பூட்டி திரளாக்கி அதைச் செய்ய வேண்டும். மக்கள் முன்னணி அதை செய்யுமா?

ஜந்து கட்சிகள் கையெழுத்திட்ட பொது ஆவணத்தை மூன்று பிரதான வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவரை மேற்படி பொது ஆவணத்தை சிவாஜிலிங்கமும் சிறீதுங்க ஜெயசூரியவும்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அனுரகுமார திசாநாயக்க அதில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கிறார். இப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் ஒன்றில் சிவாஜிலிங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது சிறீதுங்க ஜெயசூரியவிற்கு வாக்களிக்க வேண்டும். அல்லது ஜே.வி.பியோடு பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும். இல்லை என்றால் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் அவருடைய நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை அறிவித்து விட்டார். புதன்கிழமை 5 கட்சிகளும் கூடி முடிவெடுக்க முன்னரே அவருடைய முடிவு வெளிவந்திருக்கிறது. ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு துலக்கமான வழிகாட்டலை செய்யவில்லை. எந்த ஒரு பிரதான வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமது விரலை சுட்டிக் காட்டுவதற்குத் தமக்கு தார்மீக உரிமை இல்லை என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது சிறீதுங்க ஜெயசூரியவை ஏற்றுக் கொள்ளலாமா?

ஆனால் விக்னேஸ்வரன் பகிஸ்கரிப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரிக்கவில்லை. அப்படி என்றால் தமிழ் மக்கள் என்ன செய்வது? கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் 80 விகிதத்துக்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள். எனவே மக்கள் தாங்களே முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிடலாம் என்று சில கருத்துருவாக்கிகள் கூறுகிறார்கள்.

தமிழ் மக்கள் தாமாக வாக்களித்தால் யார் வரவேண்டும் என்று வாக்களிப்பதற்கு பதிலாக யார் வரக்கூடாது என்று முடிவெடுத்தே வாக்களிப்பார்கள். அது அதன் தர்க்க பூர்வ விளைவாக சஜித் பிரேமதாசவுக்கே சாதகமாக முடியும்.

அதாவது ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு உருவாக்கிய பொது ஆவணத்தை ஏற்றுக் கொள்ளாத ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருக்கும். நிச்சயமாக அவை பேர வாக்குகளாக இருக்காது.

-அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

இதையும் படிங்க

“நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு

எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார்.

இலங்கையில் திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர் | தமிழரசி

திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர்               அநுராதபுரத்தில் நடந்த திருக்குறள் மாநாடு மலர் 1955            ...

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

இன்னொரு பதிவு - சங்க இலக்கியம் பொருநராற்றுப்படை ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும்...

கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியம்கார் நாற்பதுகார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும்.பாடியவர்: மதுரைக் கண்ணங் கூத்தனார்திணை: முல்லைத் திணைகாலம்:கி.பி 300 இலிருந்து 600 வரை.கார் நாற்பது...

தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட...

தொடர்புச் செய்திகள்

விடுதலைப் புலிகள் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

43 வருடங்களின் பின் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்!

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70...

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வதுவை | சர்வதேச விருதுகள் பெற்று தமிழ்நாட்டில் கவனம் பெறும் கிளிநொச்சி யுவதியின் குறுந்திரைப்படம்

இந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் "லிப்ஷிஜா மகேந்திரம்" அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும்...

பலோன் டி’ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி  வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இப் போட்டியில்...

மேலும் பதிவுகள்

பிரிட்டன் அமைச்சருடன் நல்லிணக்கம் தொடர்பில் சுமந்திரன் பேச்சுவார்த்தையாம்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக்...

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

கடந்த 20 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு அவரை வெட்டி கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சதேகநபர்கள் இருவர் கடந்த...

வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

எம்மில் நாற்பது வயதைக் கடந்தவர்களில் உடற்பருமன் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்புடன் இருப்பவர்களில் சிலருக்கும் பிறருக்கும் பச்சிளம் குழந்தைகளின் சிலருக்கும் எம்ட்டி...

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பதல்ல | அரச உத்தியோகத்தர் சம்பள மதிப்பாய்வு தேவை

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்குட்படுத்தப்பட வேண்டியதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதே...

பிந்திய செய்திகள்

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா…!

2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர்,...

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை!

ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021

மேஷம்மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள்.

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார...

துயர் பகிர்வு