Monday, March 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை புரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்

புரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்

6 minutes read

இலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது!!

இரு தினங்களுக்கு முன்னர் புரெவிப்புயல் பற்றிய விழிப்புணர்வு தொடர்பில் எழுதிக்கொண்டிருந்தபோதும், எம்மில் பலர் புரெவிப்புயலை நகைச்சுவையாகவே கொண்டாடிக்கொண்டிருந்தனர்!! நகைச்சுவை நல்லது தான்!! ஆனால் பாடங்களை கற்றுக்கொள்ளமால் நகைச்சுவை மட்டுமே இருந்தால் அதுவே நம் நிரந்தர அழிவுக்கான நாளைய காரணமாகிவிடவும் கூடும்!!

இன்று காலைமுதல் புரெவிப்புயலின் தாண்டவங்கள் என்ற பெயரில் பல்வேறு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளன! அவற்றில் சிலவற்றை தரவிறக்கி நானும் பகிர்ந்துள்ளேன்!!

இந்த புயல் இன்னும் சில நாட்களுக்கு பயணப்படப்போவதைப் போல இந்த அழிவின்/ வெள்ளக்காட்சிகளின் புகைப்படங்களும்  இன்னும் சில நாட்களுக்கு சமூகவலைத்தளங்களில் வலம் வரும்!! அதன் பின்னர் நாங்கள் வேறு ஒரு விடையத்தை நோக்கி நகர்ந்துவிடுவோம்!! மறுபடியும் வெள்ளம் வரும் போது மட்டும் பேச ஆரம்பிப்போம்!!

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சுற்றிக்கொண்டிருக்கப்போகிறோம்??

எங்களில் பலருக்கு வெறும் செய்தியாக/பேசுபொருளாக மட்டும் இருக்கும் இந்த விடையம் எம் உறவுகள்/ அயலவர்கள் பலருக்கு வாழ்வாதார அழிவு என்பதை நம்மில் பலர் புரிந்துகொள்வதில்லை!!

இதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்கிறீர்களா?? சம்பந்தபட்ட வர்கள் மட்டுமே பொறுப்பு என்கிறீர்களா?? இல்லவே இல்லை!! 

நாங்கள் அனைவரும் தான் பொறுப்பு!!

1) வீதிகளை புனரமைக்கப்படும் போதே வடிகாலமைப்பும் சேர்த்து திட்டமிடப்படவேண்டும் என்பது தெரிந்தும் அதை செய்யாமல் இருப்பது யார்??

நாங்கள் எல்லோரும் தான்!!

2) வீதிகளை புனரமைத்துக்கொடுத்தோம் என்ற பெயரில் வடிகாலமைப்புக்கான இடத்தையும் நிரவி விட்டு வெள்ளங்கள் வீடுகளுக்குள் புகுந்து விளையாட்டுக்காட்டும் வரை வேடிக்கை பார்த்தவர்கள் யார்??

நாங்கள் எல்லோரும் தான்!

3) எனக்கு தெரிந்த அடிப்படையில் கே.கே.எஸ் வீதியில் யாழ்நகர், கொக்குவில், குளப்பிட்டி, தாவடி, கோண்டாவில், இணுவில் வரையும் பின்னர் தெல்லிப்பழை ஆகியன 1970 களிலேயே வடிகாலமைப்புடன் நகர திட்டமிடலை நோக்கி உருவாக்கப்பட்டிருந்தன. வீதிகளின் மருங்கில் மிகப்பெரிய கால்வாய் அமைப்புகளை இன்றும் காணலாம்…

ஆனால் எனது அறிவுக்கு எட்டியவரை வடிகாலமைப்புடன் கூடிய பெரிய அளவிலான எந்த வீதி அபிவிருத்தியையும் கடந்த 30 வருடங்களாக வடமாகாணத்தில் கேள்விப்படவில்லை( ஒரு சில இருந்திருக்கலாம்) ஆக வடிகாலமைப்புகளை கருத்தில் கொள்ளாமல் இவ்வளவுகாலமும் திட்டங்களை நிறைவேற்றியதில் எங்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபைகள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைகள், மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேசசபைகளின், நீர்ப்பாசனதிணைக்களம் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்கு உண்டல்லவா??

இவைபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வேடிக்கை பார்ப்பது யார்??

நாங்கள் அனைவரும் தானே!!

நிலைபேறான நீர்முகாமைத்துவத்தில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம்??

ஏராளமான குளங்களை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்!!  வடமாகாணத்தில் மட்டுமே பெரிது, சிறிது என்று எல்லாவற்றையும் உள்ளடக்கினால் கிட்டத்தட்ட 1000 தாண்டிவிடும்..

எங்கள் காலப்பகுதியில் நாங்கள் புதிதாக எந்த குளத்தையும் உருவாக்கியது கூட இல்லை!!

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா??

குளங்களை நிரவிக்கொண்டிருக்கிறோம்!! 

குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகளை நிரவிக்கொண்டிருக்கிறோம்!! 

ஆங்காங்கே வளவுகளிலும், தோட்டங்களிலும் நீரை தேங்க வைக்கிறோம்!! வளவில் உள்ள பயிரும் அழியும்!! 

இன்றைய நிலையில் குளங்களை தூர்வாரல் என்பது இன்று மிகப்பெரிய இலாபமீட்டும் பிசினஸ்!!

ஏனெனில் மாரிக்கு சற்று முன்பதாக தான் தூர்வாரல் என்ற பெயரில் மிப்பெரிய தொகையில் கன்ராக்ட் பெற்று ஆரம்பிப்பார்கள்!! சிலநாட்களிலேயே மழைவெள்ளம் வந்து பெரும்பாலும் குளங்கள் நிரம்பிவிடும்.. ஆக தூர்வாரல் முற்றுப்பெற்றதாக மிச்ச பணத்தையும் பெற்றுக்கொண்டு திட்டத்தை முடித்துவிடுவார்கள்!!

மறுபடியும் தண்ணீர் வற்றியவுடன் தானே  அதை check பண்ண முடியும்… 

நான் எல்லோரையும் சொல்லவில்லை!! பெரும்பாலும் இதுதான் நடப்பதாக உணர்கிறேன்.. 

ஏனெனில் குளங்கள் தூர்வாரப்பட்டு, வடிகாலமைப்பு சரியாக பேணப்படுமாயின் வீடுகளும் வீதிகளும் 

குளங்களாக எதற்கு மாறவேண்டும்??

“நீரின் இருப்பிடங்களை நாங்கள் ஆக்கிரமித்துவிட்டதால் நீர் இருப்பிடம் தேடி அலைந்துகொண்டிருக்கிறது”

என்று யாரோ ஒரு கவிஞன் எழுதியிருந்தான்!!

இவற்றை செய்துகொண்டிருப்பது நாங்கள் தானே??

எங்களில் எத்தனை பேர் எங்கள் சொந்த வீட்டுக்கு முன்னால் உள்ள கால்வாய்களை பேணியிருக்கிறோம் அல்லது எங்கள் வீட்டு நீர் வழிந்தோடவேண்டிய பாதை பற்றி சிந்தித்திருக்கிறோம்??

காலநிலை மாற்றம் பற்றி ஒரு சிலர் மட்டும் தொடர்ந்நு குரல் கொடுத்து வருகின்றனர்!! 

அதுபற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம்??

ஏன் இப்போதெல்லாம் அடிக்கடி புயல் வருகிறது தெரியுமா??

ஏன் அடிக்கடி பருவம் தப்பிய மழை பெய்கிறது!!

பருவப் பெயர்ச்சி மழையை நம்பிய பயிர்ச்செய்கையில் எத்தனை ஆயிரம் விளைநிலங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது என்று என்றைக்காவது சிந்தித்துள்ளோமா??

இனியாவது சிந்திப்போமா?? காலநிலை மாற்றத்தை சரிசெய்ய நாம் தனியாக என்ன சாதித்துவிடப்போகிறோம் என்று புறுபுறுப்பது கேட்கிறது!!

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் என்ன முடியுமோ அதை செய்வோம்!! 

அண்மையில் கூட காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது..

எத்தனை பேர் அதில் கலந்துகொண்டோம்!! சூழல் சம்பந்தபான ஏராளமான அறிவூட்டல்கள் அங்கு கிடைத்தது!! நம்மால் முடிந்ததை நாம் பங்களிக்க ஏராளமான வழிகள் உண்டு!!

ஆக நாம் நினைத்தால் நாமும்எங்களால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பை வழங்கலாம்!! 

அதை ஒவ்வொருயும் செய்தால் மாற்றம் நிட்சயம் வரும்!!

காலநிலை மாற்றம், நீர் முகாமைத்துவம், வடிகாலமைப்பு, வீதி அபிவிருத்தி சார்ந்து விடையங்களை அறிந்துகொள்ளுங்கள்!!

நிர்வாக கட்டமைப்புகளிடம் கேள்விகளை கேளுங்கள்!!

நீங்கள் தெரிந்துவிட்டவர்கள் தானே பெரும்பாலான விடையங்களை அரைகுறையாக அனுமதிக்கிறார்கள்??

அவைதான் வெள்ளத்தை உங்கள் வீடுவரை கொண்டுவருகின்றன!!

இனிவரும் காலத்திலாவது, இவ்வாறான அழிவுகளை வேடிக்கையாக கடந்துவிடாமல், மீண்டும் இவ்வாறான அழிவுகள் ஏற்படாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் என்ன பங்களிப்பை வழங்கலாம் என யோசிப்போம்!! மற்றவர்களுக்கும் அறிவூட்டுவோம்!!

நிலைபெறான வளர்ச்சியை நோக்கி ஒரு சமூகமாக இழப்புகளை குறைத்துக்கொண்டு நகர முயல்வோம்!!

நன்றி!

திருநாவுக்கரசு தயந்தன்

03.12.2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More