செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை நமக்கு மேல் உள்ளவர்களை நினைத்து வாழ்வதை விட நமக்கு கீழ் உள்ளவர்களை நினைத்து வாழ்வதே சிறந்தது !!!நமக்கு மேல் உள்ளவர்களை நினைத்து வாழ்வதை விட நமக்கு கீழ் உள்ளவர்களை நினைத்து வாழ்வதே சிறந்தது !!!

நமக்கு மேல் உள்ளவர்களை நினைத்து வாழ்வதை விட நமக்கு கீழ் உள்ளவர்களை நினைத்து வாழ்வதே சிறந்தது !!!நமக்கு மேல் உள்ளவர்களை நினைத்து வாழ்வதை விட நமக்கு கீழ் உள்ளவர்களை நினைத்து வாழ்வதே சிறந்தது !!!

2 minutes read

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படு கின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

”செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்”

அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. காலில் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.

இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.

இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.

கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது.

உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது. கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.

பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் – அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக – அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர். இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது.

அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

 

 

நன்றி : கரை செல்வன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.